UAE Tamil Web

அபுதாபி: எமிராட்டி தியாகியின் பெயர் சூட்டப்பட்ட மசூதி வழிபாட்டிற்காக திறப்பு..

mosque

எமிராட்டி தியாகியின் பெயர் வைக்கப்பட்ட மசூதி ஒன்று அமீரகத்தில் திறக்கப்பட்டுள்ளது. அபுதாபியின் அல் சம்ஹா பகுதியில், எமிராட்டி தியாகியான ஜகாரியா சல்மான் ஒபைத் அல் ஜாபி அவர்களின் பெயரிடப்பட்ட மசூதி திறக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

தாயகத்தின் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த நீதியுள்ள மகன்களில் ஒருவர் ஜகாரியா சல்மான் ஒபைத் அல் ஜாபி ஆவார். அபுதாபி கிரவுன் பிரின்ஸ் கோர்ட்டில் தியாகிகளின் குடும்பங்கள் விவகார அலுவலகத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள ஷேக் கலீஃபா பின் தஹ்னூன் பின் முகமது அல் நஹ்யான், இந்த மசூதியை திறந்து வைத்தார்.

1

இந்த மசூதியை ஒரே நேரத்தில் 400-க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் பயன்படுத்த முடியும். இது பொறியியல் வடிவமைப்புகளின் சமீபத்திய மற்றும் மிக உயர்ந்த தரத்தின்படி வழிபாட்டாளர்களுக்கு சேவைகளை வழங்கும் என்று அரசு செய்தி நிறுவனமான வாம் தெரிவித்துள்ளது. பல மாதங்களுக்கு பிறகு நாடு முழுவதும் நேற்று துவங்கிய ஜூம்ஆ தொழுகையின் போது வழிபாட்டாளர்களுடன் ஷேக் கலீஃபா பின் தஹ்னூன் இணைந்தார். புதிதாக திறக்கப்பட்ட மசூதியின் காரிடார்கள் மற்றும் செய்யபட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தார்.

தியாகிகளின் குடும்பங்களின் தேவைகளை மேற்பார்வையிட்டு பல்வேறு துறைகளில் அவர்களுக்கு உதவுகின்ற தியாகிகளின் குடும்ப விவகார அலுவலகம், நாட்டில் தியாகிகளின் நினைவை நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு பல திட்டங்களையும், முன்முயற்சிகளையும் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாட்டின் தியாகிகளின் பெயரை மசூதிகளுக்கு வைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தியாகிகள் மீதான நாட்டின் விசுவாசம் மற்றும் நன்றியுணர்வை பிரதிபலிக்கும் வகையில் இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.