UAE Tamil Web

அமீரக தேசிய தினம்: குடிமக்களுக்கு 7 பில்லியன் திர்ஹம்ஸ் வீட்டுக் கடன்களை வழங்க உத்தரவிட்ட அபுதாபி.!

abudabi

அபுதாபியிலுள்ள 6,100 குடிமக்களுக்கு 7 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான வீட்டுக் கடன்களை வழங்க, அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமை துணைத் தளபதியும், அபுதாபி நிர்வாகக் குழுவின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார்.

- Advertisment -

மேலும் ஓய்வுபெற்ற குறைந்த வருமானம் கொண்ட குடிமக்கள் மற்றும் கடன் வாங்கி விட்டு இறந்தவரின் குடும்பங்களுக்கு கடன்களை திருப்பிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு நாட்டின் ஜனாதிபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவுகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15.5 பில்லியன் திர்ஹம்ஸ் வீட்டுவசதி தொகுப்புகளின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வீட்டு கடன்கள் மற்றும் கடன் கட்டுவதில் விலக்கு உள்ளிட்டவை சமூக ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்தவும், குடிமக்களின் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யவும், நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டில் அவர்களின் பங்கை வலுப்படுத்தவும் அமீரக தலைமையால் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது.

அமீரக குடிமக்களுக்கு வீட்டுக் கடன்களை ஊக்குவிக்க ஷேக் முகமதுவின் ஆர்வத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆண்டு 5,000-க்கும் மேற்பட்ட வீட்டுக் கடன்களுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.