UAE Tamil Web

அமீரக தேசிய தினம்: அபுதாபியின் இந்தப் பகுதிக்குள் ட்ரக்குகள் நுழையத் தடை..!

Truck

அமீரக தேசிய தினம் கொண்டாடப்படும் டிசம்பர் 2 ஆம் தேதியன்று அபுதாபி ஐஸ்லேண்டிற்குள் ட்ரக்குகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) வெளியிட்டுள்ள அறிக்கையில் அமீரக தேசிய தினத்தன்று ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் சாலைக்குள் ட்ரக்குகள் நுழைய அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITC தனது ட்விட்டர் பக்கத்தில் வரைபடத்தை வெளியிட்டு போக்குவரத்து கட்டுப்பாட்டை விளக்கியுள்ளது.

வாகனவோட்டிகள் அனைவரும் கவனமாகவும் சாலைப் போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டும் வாகனங்களை இயக்கவேண்டும் என ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் தெரிவித்திருக்கிறது.