UAE Tamil Web

அபுதாபியில் போக்குவரத்து நெரிசல்: வாகனவோட்டிகளை எச்சரித்த காவல்துறை..!

uae-traffic,-dubai-traffic,-sharjah-traffic

அபுதாபியில் இன்று காலை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வாகனவோட்டிகள் கால தாமதத்தை சந்தித்து வருவதாக அபுதாபி காவல்துறை தெரிவித்திருக்கிறது.

அல் சாதா மேம்பாலத்தில் (Al Saada Bridge) ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசலினால், அப்பகுதியில் இருந்து வெளியேறும் வழிகளில் பயணிப்பவர்கள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

ஆகவே வாகனவோட்டிகள் மாற்று வழிகளில் செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.