அபுதாபியில் இன்று கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகனவோட்டிகள் மணிக்கு 80 கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
#Alert #Fog_Alert #NCM pic.twitter.com/IlJapCMzmW
— المركز الوطني للأرصاد (@NCMS_media) January 20, 2021
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அபுதாபி காவல்துறை, முகமது பின் ரஷீத் சாலை (அபுதாபி – துபாய்), மக்தூம் பின் ரஷீத் சாலை (அல் சமீஹ் – துபாய்), அபுதாபி – அல் அய்ன் சாலை, அல் ஃபயா சாலை (டிரக்குகளுக்கான சாலை), அபுதாபி – அல் ஸ்வெய்ஹான் சாலை ஆகியவற்றைப் பயன்படுத்தும் வாகனவோட்டிகள் கவனத்துடன் செயல்படும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றும்படியும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள பனிமூட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாகனவோட்டிகள் அறிந்துகொள்ளுமாறும் அபுதாபி காவல்துறை தெரிவித்திருக்கிறது.
#عاجل | #تحذير #ضباب
تم تفعيل منظومة خفض السرعات الى 80 كم/س على طريق الشيخ محمد بن راشد (أبوظبي – دبي)#Urgent | #Warning #Fog
Speed reduction system activated to 80 Km/h on Mohammed Bin Rashid road (Abu Dhabi – Dubai)— شرطة أبوظبي (@ADPoliceHQ) January 20, 2021
தேசிய வானிலை ஆய்வுமையம் நேற்று இரவு முதல் 12 மணிநேரங்களுக்கு பனிமூட்ட எச்சரிக்கையை விடுத்திருந்தது. நேற்று, பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் சாலைகள் கண்ணுக்குப் புலப்படவில்லை. இதன்காரணமாக அபுதாபியில் நேற்று 19 வாகனங்கள் அடுத்தடுத்து மோதலைச் சந்தித்தன. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 8 பேர் காயமடைந்ததாகவும் அபுதாபி காவல்துறை தெரிவித்திருந்தது.