கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமீரக தலைநகரில் அபுதாபி ஷாப்பிங் சீசனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீஸனானது 9 வாரங்களுக்கு இருக்கும் என்றும், இந்த காலக்கட்டத்தில் 80% வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10-ம் தேதி துவங்கிய இந்த ஷாப்பிங் திருவிழா பிப்ரவரி 14, 2021 வரை இயங்க உள்ளது இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை, அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா முழுவதும் உள்ள மால்களில் பரவலான தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.
தொடர்ச்சியாக 2 மாதங்கள் நடைபெற உள்ள இந்த மிகப்பெரிய அபுதாபி ஷாப்பிங் சீசனில், 3,500-க்கும் மேற்பட்ட ரீடெய்ல் விற்பனையாளர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மால்கள் பங்கேற்றுள்ளன. இந்த சலுகை திருவிழா நிகழ்வு துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) 26-வது பதிப்போடு ஒத்துப்போகிறது. DSF வரும் டிசம்பர் 17 துவங்கி 2021 ஜனவரி 30-ம் தேதி முடிகிறது.
Retail Abu Dhabi, the retail platform of @dctabudhabi, has announced the inaugural of Abu Dhabi Shopping Season, which will run across the emirate from 10 December to 14 February next year. pic.twitter.com/3wRi5ug5Lh
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) December 10, 2020
மேற்கண்ட இரண்டு மெகா ஷாப்பிங் சீசன்களும் கோவிட் -19 தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் உள்ளூர் ரீடெய்ல் துறைகளுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.