UAE Tamil Web

வீடியோ: சிக்னலில் நின்ற வாகனங்களை சிதறடித்த கார் – டிரைவரின் கவனக்குறைவால் நேர்ந்த மோசமான விபத்து..!

Accident

அபுதாபி காவல்துறை நேற்று மோசமான விபத்து ஒன்றின் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், சிக்னலில் வாகனங்கள் நின்றுகொண்டிருக்கின்றன. அப்போது வேகமாக வரும் SUV கார் சிக்னலில் நிற்கும் வாகனங்களுக்குள் வேகமாக சென்று கொடும் விபத்தை ஏற்படுத்துகிறது.

பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகளை அபுதாபி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வாகனத்தை இயக்கிய ட்ரைவர், கவனச் சிதறலால் இந்த விபத்தை ஏற்படுத்தியதாகவும் அவருக்கு 800 திர்ஹம்ஸ் அபராதமும் 6 கரும்புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

பி ரோட் சேஃப் (Be Road Safe), யுவர் கம்மெண்ட் (Your Comment) ஆகிய திட்டங்களின் அடிப்படையில் அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை இணைந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளன.

Accident
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap