அபுதாபியில் நேற்று, குறிப்பிட்ட சில இடங்களில் மழை பெய்தது. தேசிய வானிலை ஆய்வுமையத்தின் அறிக்கையின்படி ருவைஸ், உம் அல் அஷ்டன், ஜபீல் தன்னா, பனியாஸ், ஸிர்கு ஐஸ்லேண்ட் மற்றும் அர்ஸனா ஐஸ்லேண்ட் ஆகிய பகுதிகளில் மழையானது பொழிந்திருக்கிறது.
அபுதாபியின் அல் தஃப்ரா பகுதியில் மழை பெய்யும் வீடியோ ஒன்றினை பிரபல சமூக வலைத்தள சேனலான ஸ்டார்ம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக #cloud_seeding என்ற ஹேஷ்டாக்கைப் பயன்படுத்தி மழை எச்சரிக்கையை விடுத்திருந்தது தேசிய வானிலை ஆய்வுமையம்.
View this post on Instagram
Cloud Seeding
கிளவுட் சீடிங் என்பது மழையை தரக்கூடிய மேகங்களைக் கண்டறிந்து செயற்கை மழையை உருவாக்கும் தொழிநுட்பம் ஆகும். அமீரகத்தின் வருடாந்திர மழைப்பொழிவு சராசரியாக 100 மில்லிமீட்டர் மட்டுமே என்பதாலும், அமீரகத்தின் நிலத்தடி நீரை அதிகரிக்கும் நோக்கத்தோடும் தேசிய வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் இந்த தொழில்நுட்பத்தை கையாண்டு வருகின்றனர்.
மழைக்கான மேகத்தைக் கண்டறிய உயர் தொழில்னுட்ப ரேடார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மழை மேகங்கள் இருப்பது உறுதியானவுடன் வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த பைலட்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் இப்பணியில் இறங்குவர்.