UAE Tamil Web

அபுதாபி கோவிலில் வைக்கப்பட இருக்கும் அழகிய சிற்பங்கள் செதுக்கும் பணிகள் தீவிரம் – வீடியோ..!

Abudhabi Hindu Temple

அபுதாபியில் கட்டப்பட்டுவரும் இந்துக்கோவிலில் இடம்பெற இருக்கும் கலை நுணுக்கம் மிகுந்த சிற்பங்கள் செதுக்கும் பணிகள் ராஜஸ்தானில் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் இந்தப் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.

- Advertisment -

அபுதாபி கோவில் கட்டுமானப்பணிகளை நிர்வகிக்கும் BAPS நிர்வாகம் சமீபத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் ஒட்டகம் போன்ற விலங்குகள் கற்களில் செதுக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்துப் பேசிய அந்நிர்வாகத்தின் பிரதிநிதி,”அபுதாபியில் கட்டப்பட்டுவரும் கோவிலில் இடம்பெற இருக்கும் சிற்பங்களை செதுக்கும் பணிகள் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுவருகின்றன. இந்த சிற்ப கலைஞர்கள் ஆயிரமாண்டு பழைமையான நுண்கலையை கற்களில் செதுக்குவதோடு மட்டுமல்லாமல் பக்தி மற்றும் நல்லிணக்கத்தின் குறியீட்டை உருவாக்கிவருகிறார்கள்” என்றார்.

இந்த சிற்பங்கள் வருகின்ற மார்ச் மாதத்தில் அமீரகம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் டிபி வேர்ல்ட் (DP World) மற்றும் டிரான்ஸ்வேர்ல்ட் க்ரூப் (Transworld group ) ஆகியவை இந்த பிரம்மாண்ட கற்களை இந்தியாவில் இருந்து அமீரகத்திற்குக் கொண்டுவரும் பணியினை மேற்கொள்ள இருக்கின்றன.

அபுதாபியில் கோவில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 3 அடி வரையிலும் கட்டிடத்தின் அடித்தளம் எழுப்பப்பட்டுள்ளது. (புகைப்படங்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.)

மேலும், இந்தக் கோவிலின் பல முக்கிய சுவாரஸ்ய தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.