UAE Tamil Web

“கொரோனா அதிகரிப்பால் அச்சம் வேண்டாம் ; அமீரகம் இதனையும் கடக்கும்” அபுதாபி இளவரசர் அட்வைஸ்..!

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சமீப வாரங்களாக அமீரகத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று குறித்து பேசியிருக்கிறார்.

“கடந்த அலையைப்போலவே இந்த கொரோனா அலையும் கடந்து போகும். கொரோனா ஒவ்வொரு அலையாக நம்மைத் தாக்குவது நமக்குத் தெரியும். நல்லவேளையாக இந்த அலை ஆபத்தானதாக இல்லை” என இளவரசர் கூறியுள்ளார்.

மேலும், வயதானவர்கள், நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். அத்தகைய நபர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பொறுப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் அனைவரும் பின்பற்றவேண்டும். கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும் என இளவரசர் தெரிவித்தார்.

டிசம்பர் துவக்கத்தில் சராசரியாக 100 என்ற எண்ணிக்கையில் அமீரகத்தில் தினசரி கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது அமீரகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000 ஐக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap