UAE Tamil Web

நாளைமுதல் சென்னை – அபுதாபி இடையே விமான சேவை துவங்கும் : எதிஹாட் அறிவிப்பு..!

Etihad_Air_

அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் நாளை முதல் (ஆகஸ்டு 7) இந்தியாவின் 5 நகரங்களிலிருந்து அபுதாபிக்கு விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நகரங்கள் சென்னை, கொச்சி, பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் புது தில்லி ஆகும்.

ஆகஸ்டு 10 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவின் பிற நகரங்களில் இருந்தும் அபுதாபிக்கு சேவைகள் துவங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மும்பை, ஹைதராபாத், அகமதாபாத் (டிரான்ஸிட் பயணிகளுக்கு மட்டும்) பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் இருந்து விமானங்கள் அபுதாபிக்கு இயக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

போலவே, வங்கதேசத்தின் டாக்கா மற்றும் இலங்கையின் கொழும்புவில் இருந்தும் 10 ஆம் தேதி விமான சேவைகள் துவங்கப்பட இருக்கின்றன.

ICA ஒப்புதல், தடுப்பூசி சான்றிதழ், PCR பரிசோதனை உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை பயணிகள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Etihad_Air_
21 Shares
Share via
Copy link