உலகளாவிய முதல் 5 அடையாளங்களில் அபுதாபி ஷேக் சயீத் கிராண்ட் மசூதி இடம் பிடித்துள்ளது!

Abu Dhabi's Sheikh Zayed Grand Mosque came in third place among the top 10 world landmarks, according to global travel platform TripAdvisor.

முதல் 5 உலகளாவிய அடையாளங்களில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதி இடம் பிடித்துள்ளது.

உலக டிராவல் பிளாட்பாம் குளோபல் டிரிப் அட்வைசரின் (TripAdvisor) அறிக்கையின்படி, அபுதாபியின் ஷேக் சயீத் கிராண்ட் மசூதி முதல் 10 உலக அடையாளங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த ஆண்டு 68 நாடுகளிலிருந்து 759 அடையாளங்கள் அங்கீகரிக்கப்பட்டு டிரிப் அட்வைசரின் டாப் ’10 டிராவலர்ஸ் சாய்ஸ்’ விருதுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.

டாப் 10 அடையாளங்களில் ஷேக் சயீத் கிராண்ட் மசூதி தான் உலகில் உள்ள அடையாளங்களில் இளமையான ( Youngest) அடையாளம் என்ற பெருமையை பெற்றுள்ளது, என டிரிப் அட்வைசர் (TripAdvisor) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கம்போடியாவின் Angor Wat மற்றும் ஸ்பெயினின் பிளாசா டி எஸ்பானா முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

12 மாதங்களுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட டிரிப் அட்வைசர் (TripAdvisor) அறிக்கையில், பயணிகளின் மதிப்புகள் மற்றும் மதிப்பீடுகள் அளவு மற்றும் தரத்தை கணக்கில் கொண்டு இவ்விருது வழங்கப்படுகிறது.

மசூதியை பற்றிய குறிப்பு:

இந்த கிராண்ட் மசூதி 1996 மற்றும் 2007 க்கு இடையில் கட்டப்பட்டதாகும். இதை சிரிய கட்டிடக் கலைஞரான யூசெப் அப்தெல்கி வடிவமைத்தார். இது 12 ஹெக்டேர் (30 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் மறைந்த தலைவர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் தொடங்கிவைத்தார்.

இந்த மசூதி ஒரே நேரத்தில் 40,000 பேர் வழிபாடு செய்யும் அளவு திறன் கொண்டது.

ஷேக் சயீத் கிராண்ட் மசூதியில் பல சிறப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று பிரார்த்தனை அறையில் உள்ள கம்பளம் ஈரானின் கார்பெட் நிறுவனத்தால் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய கம்பளமாக கருதப்படுகிறது.

Loading...