UAE Tamil Web

இந்த 33 நாடுகளில் இருந்து அபுதாபி வருவோருக்கு குவாரண்டைன் கிடையாது: புதுப்பிக்கப்பட்ட கிரீன் லிஸ்ட் வெளியீடு..!

abudhabi_airport1_

அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கிரீன் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பயணிகள் விமான நிலையம் வந்திறங்கியதற்குப் பின்னால் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. வந்திறங்கிய ஆறாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பயணிகள் வருகையின் போது பிசிஆர் பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழு நாட்களுக்கு குவாரண்டைன் இருக்க வேண்டும். வந்திறங்கிய ஆறாவது நாளில் மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Alhosn அப்ளிகேஷனில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி எடுத்துக்கொண்ட அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் அனைவருக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

கிரீன் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பயணிகள் வருகையின்போது பிசிஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. வந்திறங்கிய ஆறு மற்றும் ஒன்பதாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்கள் வருகையின்போது பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். பத்து நாட்களுக்கு குவாரண்டைன் இருக்க வேண்டும். வந்திறங்கிய ஒன்பதாவது நாள் மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

புதுப்பிக்கப்பட்ட கிரீன் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பட்டியலைக் கீழே காணலாம்.

  1. அல்பேனியா
  2. ஆர்மீனியா
  3. ஆஸ்திரேலியா
  4. ஆஸ்திரியா
  5. பஹ்ரைன்
  6. பெல்ஜியம்
  7. புருனே
  8. பல்கேரியா
  9. கனடா
  10. சீனா
  11. செக் குடியரசு
  12. ஜெர்மனி
  13. ஹாங்காங் (SAR)
  14. ஹங்கேரி
  15. ஜோர்டான்
  16. குவைத்
  17. மால்டா
  18. மொரிஷியஸ்
  19. மால்டோவா
  20. நெதர்லாந்து
  21. நியூசிலாந்து
  22. போலந்து
  23. அயர்லாந்து குடியரசு
  24. ருமேனியா
  25. சவுதி அரேபியா
  26. செர்பியா
  27. சீஷெல்ஸ்
  28. சிங்கப்பூர்
  29. தென் கொரியா
  30. ஸ்வீடன்
  31. சுவிட்சர்லாந்து
  32. தைவான், சீனாவின் மாகாணம்
  33. உக்ரைன்
abudhabi_airport1_
5 Shares
Share via
Copy link