UAE Tamil Web

“உலக மக்கள் அனைவருக்கும் இறைவன் அமைதியைத் தரட்டும்; பெருநாள் வாழ்த்துகள்” – அபுதாபி மற்றும் துபாய் இளவரசர்களின் ட்வீட்..!

sheikh family

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஈத் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்தியில்,”ஈத் பெருநாளில் அமீரக ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி, அமீரக ஆட்சியாளர்கள், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், முதல் நிலைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை வாழ்த்துகிறேன். உலக மக்கள் அனைவரிடையே நன்மையையும் அமைதியையும் ஏற்படுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் ஈத் அல் அத்ஹா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம் மக்களுக்கு ஈத் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்நன்னாளில் இறைவன் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் அளிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் ட்விட்டர் வாயிலாக ஈத் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

sheikh family
0 Shares
Share via
Copy link