UAE Tamil Web

அபுதாபி, ராஸ் அல் கைமாவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெருநாள் விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா?

ரமலான் மாதம் 22 நாட்களை கடந்துவிட்ட நிலையில் அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30, சனிக்கிழமை முதல் மே 6 வெள்ளி வரை விடுமுறை நாட்கள் இருக்கும். பின்னர் மே 7 மற்றும் 8 ஆம் தேதி சனி, ஞாயிறு வார விடுமுறை இருக்குமேயானால் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் ஈத் அல் பித்ர் விடுமுறையாகும்.

முன்னதாக அமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு 9  நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் துபாய் மற்றும் ஷார்ஜா எமிரேட்டுகள் அரசு ஊழியர்களுக்கான விடுமுறையை நீட்டித்தது.

தற்போது அதுபோல அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமா எமிரேட்டுகள் அரசு ஊழியர்களுக்கு 9  நாட்கள் ஈத் அல் ஃபித்ர் விடுமுறை அளித்துள்ளது.

முன்னதாக அமீரகத்தில் ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது துபாய். ஷார்ஜா, அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமா எமிரேட்டுகள் விடுமுறை நாட்களை அதிகப்படுத்தியுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap