UAE Tamil Web

அரபு நாட்டில் அரசு உத்தியோகத்தில் இருந்து கொண்டு அரசை ஏமாற்றிய பலே கில்லாடி!

theft at dubai

அபுதாபி குற்றவியல் நீதிமன்றம், பொது நிதி பெற வேண்டுமென்று போலியான உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு பணத்தை பெற்ற நபரினை தற்பொழுது கைது செய்துள்ளது.

சுமார் 40 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான நிதியை மோசடி செய்யும் நோக்கத்துடன், தவறான உதவித்தொகை கோப்புகளை உருவாக்குவதற்காக, அரசு நிறுவனத்தில் பணி புரியும் அவர் தனது பதவியைப் பயன்படுத்திக் கொண்டதற்காக தண்டிக்கப்பட்டார்.

அபுதாபி பணமோசடி நீதிமன்றம் அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 50 மில்லியன் திர்ஹம் அபராதம் விதித்துள்ளது. மேலும் மோசடி செய்யப்பட்ட நிதியை அவர் திருப்பித் தர வேண்டும் என்று
உத்தரவிட்டுள்ளது.

நம் நாடுகளில் அலுவலகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மற்றும் அரசு பணியில் இருப்பவர்களுக்கும் இன்சுரன்ஸ், கல்வி உதவி தொகை மற்றும் PF எனப்படும் தொழிலாளர் உதவி தொகை, கிராஜுவிட்டி பண்ட் போன்றவை தொழிலாளர்களின் நலனுக்காக அரசால் உருவாக்கப்பட்டுள்ள பண உதவி திட்டங்கள் ஆகும்.

அதே போன்று அரபு நாட்டிலும் தொழிலாளர்களின் நலனுக்காக உதவும் பல்வேறு திட்டங்கள் அமலில் உள்ளன. சரியான ஆவணங்களை சமர்ப்பித்தார் அதன் மூலம் லட்சக்கணக்கான தொகையினை பெற்று தொழிலாளர்கள் பயன்பெறலாம்.

அரசு பணியில் இருப்பவர்களுக்கும் ஸ்காலர்ஷிப் போன்ற பல்வேறு நல உதவி திட்டங்கள் உள்ளன. அபுதாபியில் உள்ள அரசியல் நிறுவனத்தின் பணி புரியும் நபர் உதவி தொகையை பெறுவதற்காக தனது பதவியினை தவறாக உபயோகிப்பது அரசால் கண்டறியப்பட்டது.

அதாவது தவறான ஆவணங்களை சமர்ப்பித்து சுமார் 40 மில்லியன் அளவிலான தொகையினை மோசடி செய்தது அம்பலமாக உள்ளது.

வேலியே பயிரினை மேயக்கூடாது என்பது போல் தான் கொண்ட பதவியை தவறாக பயன்படுத்தி பணம் மோசடி செய்த நபரை அபுதாபி அரசு எப்பொழுது கடுமையாக தண்டித்துள்ளது.

இதுபோன்ற தவறினை பிற்காலத்தில் வருபவர்கள் செய்வதற்கு அஞ்ச வேண்டும் என்ற நோக்கத்துடன் குற்றம் புரிந்தவருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மேலும் 50 மில்லியன் திர்ஹம் அபராதமும் விதித்துள்ளது.

அரசு அலுவலகத்தில் பணிபுரியும் நபர் குற்றச்செயலில் ஈடுபட்ட இந்த சம்பவம் அபுதாபியில் வாழும் மக்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்று அரசு அலுவலகங்களில் பணிபுரியும் நபர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap