UAE Tamil Web

அபுதாபி : ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு பார்க்கிங், டோல் கட்டணங்கள் வசூலிக்கப்படாது என அரசு அறிவிப்பு..!

FREE PARKING ABUTHABI

அமீரகத்தில் ரமலான் 29 ஆம் தேதிமுதல் ஷவ்வால் 3 ஆம் தேதிவரையில் ஈத் அல் பித்ர் பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நாட்களில் அபுதாபி முழுவதிலும் உள்ள பொதுப் பார்க்கிங் இடங்களில் மக்கள் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம் என அபுதாபி நகராட்சியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது.

போலவே முஸாபா பகுதியில் உள்ள M18 பகுதியிலும் மக்கள் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மவாகிஃப் விதிமுறைகளை கவனமான முறையில் கடைபிடிக்கவேண்டும் எனவும் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மவாகிஃப் விதிமுறைகளின் அடிப்படையில் ரெசிடென்ட் பார்க்கிங் பகுதியில் இரவு 9 மணிமுதல் அடுத்தநாள் காலை 8 மணிவரையில் பொதுமக்கள் வாகனங்களை பார்க்கிங் செய்தால் 200 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

டார்ப் டோல் கேட்களில் ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் விடுமுறை முடிந்தபின்னர் வழக்கம்போல கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி – வியாழன் வரையிலான நாட்களில் காலை 7 – 9 மணிவரையிலும் மாலை 5 – 7 மணிவரையிலும் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ரமலான் மாதத்தை முன்னிட்டு காலை 8 – 10 மணிவரையிலும் மாலை 2 – 4 மணிவரையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்

அபுதாபி முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் ஈத் அல் பித்ர் விடுமுறை தினங்களில் மூடப்பட்டு மே 16 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைகள்

அபுதாபியில் ஈத் அல் பித்ர் பண்டிகை விடுமுறை நாட்களின் போது, வெள்ளிக்கிழமை மற்றும் பொதுவிடுமுறை நாட்களுக்கான அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FREE PARKING ABUTHABI
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap