UAE Tamil Web

வேலை பார்க்க, வசிக்க அபுதாபி தான் பாதுகாப்பானது – கருத்துக்கணிப்பில் தகவல்..!

abudhabi

எக்கனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் அமைப்பு மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள இந்த வருடத்திற்கான பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமீரகத்தின் தலைநகரமான அபுதாபி முதலிடம் பிடித்துள்ளது.

சுகாதார பாதுகாப்பு மற்றும் கட்டுமானப் பாதுகாப்பில் அபுதாபி சிறந்து விளங்குவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் வாழ, தொழில் செய்ய, முதலீடு செய்ய அபுதாபி சிறந்து விளங்குவது தெளிவாக தெரிவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் அபுதாபி 2015 ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து 4 வருடம் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

abudhabi
10 Shares
Share via
Copy link