UAE Tamil Web

அபுதாபி மக்களே உஷார் – இரவில் வெளியில் சுற்றுபவர்களா நீங்கள்?

உருமாற்றம் அடைந்த கொரோனா மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் அபுதாபியில் கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.

New Covid rules: Movement ban at night from March 28 in Oman - News | Khaleej Times
Credit : Khaleej Times

உணவு, மருந்து மற்றும் மருத்துவ அவசர தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெளியில் சுற்றித் திரிந்தால் 3,000 திர்ஹம்ஸ் அபராதம் வசூலிக்கப்படும் என அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.  அவசரகாலத் தேவைக்கு வெளியில் செல்வோர் அபுதாபி காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் விவரங்களை சமர்ப்பித்து பயண தகவல்களை பதிவு செய்து உரிய அனுமதி பெற வேண்டும். வழியில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தும் பட்சத்தில் ஆன்லைன் வழியாக பெற்ற அந்த அனுமதி பாசை காட்டி தங்கள் பயணத்தை தொடரலாம். உரிய அனுமதியின்றி பயணிக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அபுதாபி காவல்துறை உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

2 Shares
Share via
Copy link
Powered by Social Snap