UAE Tamil Web

என்னா வெயிலு.. தொழிலாளர்களின் கவலையை போக்கிய அபுதாபி காவல்துறையின் மனிதாபிமான செயல்!

அமீரகத்தில் கடந்த சில தினங்களாகவே வெயில் கொளுத்துகிறது. ஏசியில் பழக்கப்பட்டவர்களுக்கே வெயிலின் தாக்கம் சோர்வடையச் செய்யும் நிலையில் சாலையோர தொழிலாளர்களின் நிலைமையோ பரிதாபம்தான்! இந்த நிலையில் வெயிலில் பணியாற்றும் தொழிலாளர்களின் துயரை போக்கும் விதமாக அவர்களுக்கு தலையோடு பொருத்திக் கொள்ளும் குடையை அன்பளிப்பாக வழங்கி வருகிறது அபுதாபி காவல்துறை. ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசார் சாலை மற்றும் தெருக்களில் வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்களை கண்டால் உடனே வண்டியை நிறுத்தி அவர்களுக்கு குடையை அன்பளிப்பாக வழங்கிச் செல்கின்றனர். இதுதவிர தொழிலாளர்களுக்கு மத்தியில் முகக்கவசம் அணிவதன் அவசியம், தனி மனித இடைவேளி உள்ளிட்டவற்றை குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். கொரோனா காலகட்டத்தில் உடல்நிலையை கவனமாக பார்த்துக் கொள்ள சில டிப்சுகளும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அபுதாபி போலீசாரின் இந்த செயல் பல தரப்பட்ட மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

11 Shares
Share via
Copy link