UAE Tamil Web

யாரும் பார்க்கலைன்னு உங்க இஷ்டத்துக்கு காரை ஓட்டாதீங்க – அபுதாபி காவல்துறை வெளியிட்ட வீடியோ..!

accident

அபுதாபி காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு மக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. அதிவேகம், லேனை மாற்றுதல் போன்றவற்றை வாகனவோட்டிகள் தவிர்த்தல் வேண்டும் என போக்குவரத்துக் காவல்துறை வலியுறுத்தினாலும் சிலர் அந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்துவருகிறார்கள்.

போலவே, தம்மை யாரும் கண்காணிக்கவில்லை என்ற தைரியத்தில் லேனை மாற்றும் காரின் வீடியோவை அபுதாபி போக்குவரத்துக் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வேகமாக சென்றுகொண்டிருக்கும் கார் திடீரென இடதுபுறம் உள்ள லேனுக்குச் செல்கிறது. இது ஆபத்தானது எனவும் வாகனவோட்டிகள் இந்தத் தவறை செய்யக்கூடாது எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

accident
8 Shares
Share via
Copy link