UAE Tamil Web

நம்முடைய நாளைய உலகத்தை வளமாக்க காத்திருக்கும் இளைஞர்களைக் கொண்டாடுவோம் – அபுதாபி இளவரசரின் ட்வீட்..!

Abudhabi Prince

சர்வதேச இளைஞர்கள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக இளைஞர்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,” பெருமைவாய்ந்த நமது வரலாற்றை நம் மக்கள் கஷ்டப்பட்டு செதுக்கினர். நம்முடைய நாளைய உலகத்தினை வடிவமைக்க இருக்கும் இளைஞர்களை ஆதரிப்போம். நம் அனைவருக்குமான வளமான, ஒளிமிக்க எதிர்காலத்தைப் படைக்க இருக்கும் இளைஞர்களைக் கொண்டாடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Abudhabi Prince
5 Shares
Share via
Copy link