UAE Tamil Web

உலகின் வேகமான 5G நெட்வர்க் – வல்லரசு நாடுகளையே பின்னுக்குத் தள்ளிய அபுதாபி!

ஆக்சிஜனுக்கு நிகராக இப்போது உலகம் முழுவதும் இண்டெர்நெட் சேவை அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது. உள்ளங்கையில் உலகம் எனும் சொல்லுக்கு அர்த்தம் பாய்ச்சும் வகையில் இண்டெர்நெட் மூலம் இருந்த இடத்திலேயே அனைத்தையும் சாதிக்க முடியும். அன்றாடம் புதிய சாதனைகளை படைக்கும் தொழில்நுட்ப யுகத்தில் இன்று 5G சேவை கொடிகட்டிப் பறக்கிறது.

UAE hand in selecting 400 UK mobile phone numbers for spying - YesPunjab.com

5G சேவையின் வேகம் குறித்து அண்மையில் OOKLA எனும் தொலைதொடர்பு நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் உலகின் முன்னணி நகரங்களை பின்னுக்குத் தள்ளி அதி வேக 5G சேவை வழங்கும் தலைநகரங்களின் பட்டியலில் அமீரகத்தின் அபுதாபி 3ம் இடத்தை பிடித்துள்ளது. (fastest median download speeds 421.26 Mbps) முதல் இடத்தில் நார்வே தலைநகர் ஓஸ்லோவும் 2ம் இடத்தில் தென் கொரியாவின் சியோல் நகரமும் உள்ளன. தோஹா, ரியாத், மஸ்கட் ஆகிய நகரங்கள் 4,6,7ம் இடங்களை வகிக்கின்றன. 5G சேவையில் கொடிகட்டிப் பறக்கும் டாப் 10 நகரங்களில் 5 நகரங்கள் அரபு நாடுகளை சார்ந்தவை.

Credit : OOKLA

தொலைநோக்கு பார்வை, ஆக்கப்பூர்மான முயற்சிகளால் தொலைதொடர்பு உலகில் அமீரகம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக Telecommunications and Digital Government Regulatory Authority (TDRA) தலைவர் மஜீத் சுல்தான் அல் மெஸ்மர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் அதிவேக 5G சேவை டிஜிட்டல் உலகில் புதிய மைல்கல் என்றும் இதனை சாத்தியப்படுத்த ஒத்துழைத்த எதிசலாத், டூ நிறுவனங்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் முன்னணி நகரங்களை அபுதாபி பின்னுக்குத் தள்ளியிருப்பது மேலும் பல சாதனைகளை படைக்க உந்து சக்தியாக திகழும் என மஜீத் சுல்தான் அல் மெஸ்மர் கூறியுள்ளார்.

4 Shares
Share via
Copy link