UAE Tamil Web

விசிட், சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு இலவச தடுப்பூசி – அபுதாபி அரசு அறிவிப்பு..!

vaccine

அபுதாபியில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் சுற்றுலா, விசிட் விசா வைத்திருப்பவர்கள் இனி இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அபுதாபி அரசு தெரிவித்துள்ளது. அபுதாபியில் வழங்கப்பட்ட விசாவை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேஹாவின் அழைப்பு மைய அதிகாரி ஒருவர் இதுகுறித்துப் பேசுகையில்,” செல்லுபடியாகும் விசிட் மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் இலவசமாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம். SEHA App மூலமாக இதற்கான முன்பதிவை அவர்கள் செய்யலாம். பதிவு செய்பவர்கள் தங்களது பாஸ்போர்டில் உள்ள UID எண்ணை பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்தார்.

இவர்களுக்கு பைசர் அல்லது சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது. செல்லுபடியாகும் விசிட் அல்லது சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் 80050 என்ற எண்ணை அழைத்தும் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காலாவதியான ரெசிடென்ஸ் விசா மற்றும் நுழைவு விசா வைத்திருப்பவர்கள் இனி இலவசமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

vaccine
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap