துபாய் தேரா நோக்கி செல்லும் விமான நிலைய சாலையில் விபத்து ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் ஓட்டுகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு காவல்துறை அறிவுறித்துயுள்ளது.
துபாய் தேரா நோக்கி செல்லும் விமான நிலையம் அருகில் இன்று விபத்து ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக ஓட்டுமாறு துபாய் காவல்துறை டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.
மேலும் தூசி நிறைந்த வானிலை மாற்றத்தால் அதிகப்படியான வாகன ஓட்டிகளின் கவனம் சிதற வாய்ப்புள்ளதால் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறு அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்து உள்ளது.
அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகள் தயவுசெய்து வீடியோக்கள் எடுப்பதையும், தொலைபேசியைப் பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டு வாகனத்தை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையமான (NCM) அறிவுறுத்தலின்படி, காற்று மணிக்கு 20.405 கிமீ வேகத்திலும், சில சமயங்களில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
எனவே வாகன ஓடுகளின் பார்வைக்கு இடையூறாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக சாலையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.