UAE Tamil Web

துபாய்: ஷேக் முகமது சாலையில் விபத்து – கவனம் தேவை என போலீஸ் வலியுறுத்தல்..!

traffic

துபாயின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஷேக் முகமது பின் சயீத் சாலையில் இன்று காலை விபத்து நேர்ந்திருக்கிறது. ஆகவே, வாகனவோட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்குமாறு துபாய் காவல்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” ஷார்ஜா செல்லும் வழியில் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பாக பயணம் செய்யவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துபாய் எக்ஸ்போவின் துவக்க விழா இன்று நடைபெறுவதால் வாகன நெரிசல் அதிகளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, மக்கள் அனைவரும் விவேகமாக செயல்படுவது முக்கியம் என அறிவுறுத்தப்படுகிறது.

traffic
0 Shares
Share via
Copy link