அபுதாபியில் சாலையின் நடுவில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டும் வகையில் பல கார் விபத்துக்களின் அதிர்ச்சியூட்டும் புதிய வீடியோவை காவல்துறை பகிர்ந்துள்ளது.
இது குறித்து அபுதாபி போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவு காவல்துறை , ஒருபோதும் சாலையின் நடுவில் வாகங்களை நிறுத்த வேண்டாம் என வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது.
சாலையில் வாகனம் கோளாறாகி நின்றுவிட்டால் நகர்த்த முடியாத பட்சத்தில், ஓட்டுனர் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்ள வேண்டும்.
மேலும் வாகனம் ஓட்டிக்கொண்டே தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துதல், மற்ற பயணிகளுடன் பேசுதல், புகைப்படம் எடுப்பது அல்லது மேக்கப்பை சரிசெய்தல் உள்ளிட்ட கவனத்தை சிதறடிக்கும் செயல்களை செய்ய வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
போக்குவரத்துச் சட்டத்தின்படி, வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தொலைபேசியைப் பயன்படுத்தினால் அல்லது சாலையில் கவனத்தை சிதறடித்தால் அவர்களுக்கு எதிராக 800 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் மற்றும் நான்கு பிளாக் மார்க்குகள் பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.