UAE Tamil Web

“Superstar Ravi”யுடன் கைகோர்த்த பிரபல Adidas நிறுவனம்.. அமீரகத்தில் நடந்த ஒரு சிறப்பான Mashup – முழு விவரம்

அமீரகத்தில் ஒரு வித்யாசமான mashup நடந்துள்ளது என்றே கூறலாம், ஆம், சர்வதேச அளவில் விளையாட்டு
சம்மந்தமான பொருட்களை விற்பனை செய்யும் Adidas நிறுவனம், துபாயின் புகழ்பெற்ற பாகிஸ்தான் உணவகமான “ரவிக்கு” என்று பிரத்தியேகமாக Shoe மாடல் ஒன்றை அர்பணித்துள்ளது.

இன்று செவ்வாய் அன்று Adidas வெளியிட்ட தகவலில், அடிடாஸ் ஒரிஜினல்ஸின் ‘Adilicious’ ஸ்னீக்கர்களை இன்று ஜூன் 14 அன்று ‘Superstar Ravi’ ஸ்னீக்கர்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்வதாகவும். இந்த Limited Edition காலணிகள் ஜூன் 23 முதல் துபாயில் உள்ள கடைகளில் கிடைக்கும் என்றும் தெரிவித்தது.

துபாயில் 1978ம் ஆண்டு சௌதரி அப்துல் ஹமீத் என்பவரால் அவரது குடும்பத்திற்கு சொந்தமான வணிகமாக நிறுவப்பட்டது இந்த உணவகம். ரவி உணவகம் புலம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் பல சமூகங்கள் ஒன்றிணைவதற்கான மையமாக செயல்பட்டு வருகிறது.

இன்று, Snoop Dog, பாலிவுட் நட்சத்திரங்கள், உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள், ஒன் ரிபப்ளிக், மற்றும் கிரேக் டேவிட் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள், வெளிநாட்டவர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் பார்த்து செல்லும் முக்கிய இடமாக இது உள்ளது.

“சூப்பர்ஸ்டார் ரவி” என்ற இந்த சிறப்புப் பதிப்பு, உரிமையாளர்களின் பாகிஸ்தான் பாரம்பரியத்தைக் குறிப்பிடுகிறது. இது வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள ‘நதி’ என்று பொருள்படும் “ரவி” என்ற பெயரின் பொருளைக் கொண்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap