UAE Tamil Web

அமீரகத்தில் முதல் இயற்கை எரிவாயு எரிபொருள் நிரப்பும் நிலையத்தை திறந்த அட்னாக் நிறுவனம்

அமீரகம் அட்னாக் எண்ணெய் நிறுவனம் தனது முதல் பிரத்யேக இயற்கை எரிவாயு எரிபொருள் நிரப்பும் நிலையத்தைத் திறந்துள்ளது.

அபுதாபி ஐலண்ட், அல் ஃபலாஹ் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், நகரத்தின் மையப் பகுதியில் எரிபொருள் நிரப்பும் இயற்கை எரிவாயு வாகனங்கள் இலகுவாக அணுகுவதற்கு திறக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அட்னாக் சேவை நிலையங்களில் பிரத்யேக எரிவாயு எரிபொருள் வழங்கப்படும் 30 இடங்களில் ஒன்றான அல் ஜஹியா நிலையம் பிரத்யேக இயற்கை எரிவாயு எரிபொருளை வசதிமிக்க இடங்களுக்கு மாற்றும் முயற்சியை தற்போது மேற்கொண்டுள்ளது.

பிரத்யேக இயற்கை எரிவாய்வின் தேவைகள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. தற்போது அட்னாக் நிறுவனம் அதன் சேவை நிலையங்களிலிருந்து மாற்று எரிபொருளை வழங்கி வருகிறது.

பிரத்யேக இயற்கை எரிவாயு வழக்கமான எரிபொருளை விட திறமையானது, இது மாசு மற்றும் கார்பன் தடத்தை குறைக்க உதவுகிறது, பாதுகாப்பான மற்றும் மிகவும் செலவு குறைந்த தானியங்கி எரிபொருள்களில் ஒன்றாகவும் உள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap