அமீரகத்தில் ரூமில் ஒன்றாக தங்கி இருந்தவரை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
உம் அல் குவைனின் அல் ஹம்ரா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் ஒரு அறையைப் ஆப்பிரிக்க நாட்டினர் பகிர்ந்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியுடன் தொலைபேசியில் பேசும்போது பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது, பின்னர் பாதிக்கப்பட்டவர் முதலில் குற்றவாளியின் முகத்தில் தாக்கியதால் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை பின்தொடர்ந்து கத்தியால் மார்பில் குத்திக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற குற்றவாளியை அக்கம்பக்கத்தினர் பிடித்து காவல்துறைடயிடம் ஒப்படைத்தனர்.