ஆப்பிரிக்க நாட்டில் இருந்து விமானம் மூலம் துபாய் வந்தடைந்த 47 வயது பயணியிடம் வழக்கமான முறையில் உடமைகள் சோதிக்கப்பட்டது. உடமைகளில் ஏதும் இல்லாததால் அவரை அதிகாரிகள் அனுப்ப முயன்றனர். அப்போது அவரது நடையில் வித்தியாசம் தெரிந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை உடற்பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அதில் அவரது வயிற்றுப்பகுதியில் 49 கொக்கைன் மாத்திரைகள் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அயன் திரைப்பட பாணியில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கண்களை மண்ணை தூவிவிட்டு துபாய்க்குள் கொக்கைகன் கொண்டு வர முயன்றது அம்பலமானது.
இதையடுத்து அவரது வயிற்றில் இருந்த 1 கிலோ எடையுள்ள கொக்கைனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பணத்திற்காக கொக்கைன் கடத்தியதாக ஆப்பிரிக்க நாட்டவர் வாக்குமூலம் அளித்த நிலையில் அவருக்கு 50,000 திர்ஹம்ஸ் அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து துபாய் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
