UAE Tamil Web

மீண்டும் GDRFA / ICA குறித்து புது அறிவிப்பை வெளியிட்ட அமீரக விமான நிறுவனங்கள்!

அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு பயணிக்கும் முன் GDRFA / ICA ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் GDRFA / ICA இன்றி பயணம் மேற்கொள்ளலாம் என்று அமீரக அரசு அறிவித்திருந்தது. இதனை அடுத்து மேலும் ஒரு புதிய அறிவிப்பை அபுதாபியின் எதிஹாட் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அந்நிறுவனம், “GDRFA / ICA இல்லாமல்  முழுமையாக தடுப்பூசி செலுத்தி முறையான விசாவுடன் பயணிகள் அமீரகம் வரலாம். 6 மாதங்களுக்கும் மேலாக அமீரகத்தைவிட்டு வெளியில் இருந்து மீண்டும் அமீரகத்திற்கு வரும் பயணிகளுக்கும் இது பொருந்தும்” என்று எதிஹாட் விமான நிறுவனம் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

அதே போல் துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் துபாய் வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறைகளை நேற்று வெளியிட்டது. அதில் “அமீரக குடியிருப்பாளர்களு GDRFA / ICA இல்லாமல் துபாய்க்கு பயணிக்கலாம்” என்று கூறியுள்ளது.

அது போன்று ஷார்ஜாவின் ஏர் அரேபியா விமானத்தை முன்பதிவு செய்வதற்கு முன் uaeentry.ica.gov.ae இணையதளத்தில் அந்தந்த அறிவுப்புகளை பயணிகள் பார்வையிடுமாறும், ஷார்ஜா அல்லது மற்ற எமிரேட்டில் வசிப்பவராக இருந்தால் பயணத்திற்கு முன் ஒப்புதல் பெற தேவையில்லை”என்று ஏர் அரேபியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

9 Shares
Share via
Copy link