UAE Tamil Web

அமீரகத்தில் பனைமரங்களை பராமரிக்க AI தொழில்நுட்பம்.. விவசாய உற்பத்தியை அதிகரிக்க புதிய முயற்சி – MBR Space Centre வெளியிட்ட ட்வீட்!

பனை மரங்கள் அமீரகத்தின் ஒரு குறியீட்டு விவசாய பாரம்பரியமாக கருதப்படுகின்றன, ஏனெனில் உலக அளவில் பேரிச்சம்பழங்களை உற்பத்தி செய்யும் முதல் 10 நாடுகளில் அமீரகமும் ஒன்றாகும். இந்நிலையில் அமீரகத்தின் அல் ஐன் பகுதியில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நான்கு மில்லியனுக்கும் அதிகமான பனை மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

அமீரக பொறியாளர்கள் AI தொழில்நுட்பத்தை 96 சதவீத துல்லிய விகிதத்துடன் பயன்படுத்திய பிறகு, இந்த மரங்களின் வான்வழிப் படங்களை முகமது பின் ரஷித் விண்வெளி மையம் (MBRSC) மூலம் எடுக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, விவசாய உற்பத்தியை அதிகரிக்க அமீரகத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப, MBRSC தனது AI தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இது அல் ஐனின் பல்வேறு பகுதிகளில் உள்ள 45,000 பனை மரங்களைக் கண்டறிய உதவியது.

AI ஐப் பயன்படுத்தி ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தால் பெரிய அளவிலான பகுதிகள், இடஞ்சார்ந்த மற்றும் ஸ்பெக்ட்ரல் தகவல்களை வரைபடமாக்குவதில் சாத்தியமான தீர்வுகளை வழங்க உதவுகிறது.

அல் ஐனின் பல்வேறு பகுதிகளில் உள்ள பனை மரங்களின் ஆரோக்கியத்தை பகுப்பாய்வு செய்யவும் இந்த தொழில்நுட்பம் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. உன்மையில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க மற்றும் பாதுகாக்க இது மிகப்பெரிய உறுதுணையாக அமையும்.

AI தொழில்நுட்பத்தை விவசாயத்தில் பயன்படுத்தும் வெகு சில உலக நாடுகளில் அமீரகமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap