UAE Tamil Web

அபுதாபியில் தமிழர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் – அய்மான் சங்கம் ஏற்பாடு – எப்போது? எங்கே?

aiman

அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் அய்மான் சங்கம் அமீரக வாழ் தமிழர்களின்  நல்வாழ்விற்காக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படும் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி, 4/06/2021 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அபுதாபி எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள LLH ஹாஸ்பிட்டலின் மெசைன் தளத்தில் (mezzanine floor) இல் இந்த முகாம் நடக்க இருக்கிறது.

AIMAN SANGAM

காலை 9 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும் இந்த இலவச முகாமில் வாய்ப்புள்ள அனைத்து தமிழர்களும் பங்கேற்று தங்களது ஆரோக்கியம் குறித்து அறிந்துகொள்ளுமாறு சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

இந்த முகாமில் கீழ்க்கண்ட பரிசோதனைகள் / சேவைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.

  • இரத்தத்தில் உள்ள சர்க்கரை
  • கொழுப்பு
  • இரத்த அழுத்தம்
  • ஹீமோகுளோபின்
  • யூரிக் ஆசிட்
  • BMI
  • மருத்துவ ஆலோசனைகள்

தொடர்புக்கு;

0505748716

0526269123

0553038066

0556081910

aiman
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap