UAE Tamil Web

பார்வையாளர்களின் வரவேற்பை பெற்ற அய்ன் துபாய் மறுஅறிவிப்பு வரும்வரை மூடல்!

Ain-Dubai-guide

மறு அறிவிப்பு வரும்வரை அய்ன் துபாய் முழவதுமாக மூடப்படும் என்று அதன் ஒருங்கிணைப்பளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தில் அய்ன் துபாய் ரமலான் மாதம் இறுதி வரையிலும் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கபட்டிருந்த நிலையில் தற்போது மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அய்ன் துபாய் ரமலான் மாதம் இறுதி வரை மூடப்படுவதாகவும், ஈத் அல் பித்ர் (நோன்பு பெருநாள்) விடுமுறை நாட்களுக்கு அய்ன் துபாயை மீண்டும் திறக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அய்ன் துபாய் மேம்பாட்டு பணிக்காக தாற்காலிகமாக மூடப்படுவதாகவும், வாடிக்கையாளர் குழுவுடன் இணைந்து வித்தியாசமான சலுகைகளை அறிமுகப்படுத்த இருப்பதாக கடந்த மாதம் அறிவித்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி புளூவாட்டர்ஸ் தீவு எனப்படும் இந்த அய்ன் துபாய் கோலாகலமாக வான வேடிக்கையுடன் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap