UAE Tamil Web

சிங்கப்பூர் Flyerக்கே சவால் விடும் ஐன் துபாய்(Ain Dubai) ராட்டினம்… ஒரு சுற்றுகே அரைமணி நேரமா? OMG!

Ain Dubai: ராட்டினம் என்றால் யாருக்கு தான் பிடிக்காம இருக்கும். சின்ன வயதினர் முதல் பெரியவர்கள் வரை ராட்டினத்தில் ஏறி பல சுத்து சுத்திட்டு ஒரே மயக்கமா இருந்தா கூட அந்த சந்தோஷத்த மிஸ் செய்ய யாருக்கு தான் பிடிக்காம போகும். ஆனா, திருவிழா ராட்டினங்கள் 10 சுத்துக்கு மேல சுத்துவாங்கல. ஆனால் துபாயில் இருக்கும் உலகின் மிகப்பெரிய ராட்டினமான Ain Dubai பத்தி கேளுங்க உங்களுக்கு உலகமே ஒரு சுத்து சுத்தும்.

துபாய் என்றாலே தற்போதைய காலத்தில் முதலில் பலருடைய எண்ணத்தில் வருவது புர்ஜ் கலிஃபா. அதுக்கு அடுத்து பெரும்பாலானவர்கள் மனதில் தோன்றுவது ஐன் துபாய் மட்டும் தான். ஐன் துபாய் முதலில் துபாய் ஐ என்று பெயரிடப்பட்டது. பின்னர் தான் இதன் பெயர் மாற்றப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் புளூவாட்டர்ஸ் தீவில், 250 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான ராட்டினம் இது தான். இந்த ராட்டினம் கட்டும் பணி பிப்ரவரி 2013 இல் அறிவிக்கப்பட்டது.

ஹூண்டாய் இன்ஜினியரிங் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் ஸ்டார்னெத் இன்ஜினியரிங் ஆகியவை முதன்மை வடிவமைப்பு மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர்களாக நியமிக்கப்பட்டு 2015ல் இதன் வேலைகள் தொடங்கப்பட்டு 2019 ஆண்டு முடிக்கப்பட்டது.

மார்ச் 2014ல் லாஸ் வேகாஸில் திறக்கப்பட்ட முந்தைய உலகின் மிக உயரமான ராட்டினத்தினை விட மொத்தமான 550 அடியை விட ஐன் துபாய் 270 அடி அதிக உயரம் கொண்டது. 48 கேபின்களில் 1,750 பயணிகளை ஏற்றிச் செல்லும் ஐன் துபாயில் இருந்து துபாய் மெரினா மற்றும் புர்ஜ் அல் அராப், பாம் ஜுமேரா மற்றும் புர்ஜ் கலீஃபா போன்ற அடையாளங்களை செம வியூவில் காண முடியும்.

ஐன் துபாயில் சிறுவர்களுக்கு 100 திர்ஹம்ஸும், பெரியவர்களுக்கு 120 திர்ஹம்ஸும் கட்டணமாக வாங்கப்பட்டது. இதுவும் ஒரு சுற்றுக்கு தான். ஏனெனில் ஒரு சுற்றினை சுற்றி வரவே 38 நிமிடம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

Ain Dubai மார்ச் 2022 முதல் மேம்பாட்டு பணிகளுக்காக செயல்படாமல் இருக்கிறது. 2023 ஆம் ஆண்டின் வரும் சில மாதங்களில் மீண்டும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap