21.9 C
Dubai
October 31, 2020
UAE Tamil Web

இந்தியாவின் 4 நகரங்களில் இருந்து அமீரகவாசிகளை அழைத்துவர விமானச் சேவை – ஏர் அரேபியா அறிவிப்பு..!

Air Arabia brings Emiratis home from India

இந்தியாவின் நான்கு நகரங்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரக நாட்டினரை அவர்களின் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல விமானங்களை இயக்குவதாக, ஏர் அரேபியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில் மும்பை மற்றும் டெல்லியில் இருந்து ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்கள் நேற்று (ஏப்ரல் 20) இயக்கப்பட்டது.

அதே நேரத்தில் கொச்சின் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்கள் நாளை ஏப்ரல் 22 ஆம் தேதி இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கித் தவிக்கும் அந்நாட்டு குடிமக்களை அழைத்து வருவதற்கு விமானங்களை இயக்குவதாக ஏர் அரேபியா குறிப்பிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

இந்த சிறப்பு விமானம் மற்றும் சரக்கு விமானங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு – airarabia.com



error: Alert: Content is protected !!