சென்னையில் இருந்து அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு நேரடியாக செல்லும் விமான சேவையை ஏர் அரேபியா துவங்கியுள்ளது.
ஷார்ஜவை தலைமை இடமாக கொண்டு ஏர் அரேபியா விமான நிறுவனம் தற்போது சென்னையில் இருந்து ஷார்ஜாவுக்கு நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து அபுதாபிக்கு நேரடியாக செல்லும் முதல் விமான சேவையை ஏர் அரேபியா விமானம் துவக்கியுள்ளது. வாரத்தில் திங்கள், புதன் என இருமுறை சென்னையில் இருந்து இரவு 8:25 மணிக்கு இந்த விமானம் அபுதாபி வருகிறது.
அதுமட்டுமின்றி சென்னையில் இருந்து பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகருக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் ஏர் பிரான்ஸ் விமான சேவை மே 2 முதல் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.