அமீரக தலைநகரான அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் ஏர் அரேபியா விமான நிறுவனம், சென்னைக்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
அபுதாபியிலிருந்து ஏர் அரேபியா விமான சேவை ஏப்ரல் 27, 2022 அன்று சென்னைக்கு இயக்கப்படும்.
இது தொடர்பாக, ஏர் அரேபியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதில் அல் அலி கூறுகையில், “அபுதாபியிலிருந்து இயக்கப்படும் இந்த புதிய சேவையானது வளமிக்க சென்னை நகரை பயணிகள் ரசிக்க உதவும்.
அபுதாபி, சென்னை இடையேயான விமான சேவையானது பயணிகளுக்கு குறைந்த விலையில், மதிப்பு சார்ந்த விமானப் பயணத்தை வழங்குவதற்கான அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
புதிய சேவையானது கோழிக்கோடு, கொச்சின், திருவனந்தபுரம், டெல்லி மற்றும் ஜெய்ப்பூருக்குப் பிறகு ஏர் அரேபியா அபுதாபி செல்லும் 6வது நகராக சென்னை உள்ளது.