UAE Tamil Web

இந்தியா-துபாய் இடையே விமான கட்டணம் அதிரடி குறைப்பு.. பயணிகள் மகிழ்ச்சி

emiratesboeing777

ரமலான் மாத சலுகையாக இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளை முழுவதுமாக இந்தியா சமீபத்தில் மீண்டும் துவக்கியது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து செல்லும் விமானங்களில் அதிகபட்ச கட்டணம் 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன. எமிரேட்ஸ் நிறுவனம் வாரத்திற்கு 170 விமான சேவைகள் என்று அதிகரித்துள்ளது.

இதே போன்று மற்ற விமான நிறுவனங்களும் இரு நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்து சேவைகளை அதிகரித்துள்ளன.உய்திய்

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap