39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

திருச்சியிலிருந்து துபாய்க்கு கூடுதலாக ஒரு விமானம் இயக்கம் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!

air_india_express

இந்தியாவைச் சேர்ந்த பிரபல விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விஜயவாடாவிலிருந்து திருச்சி வழியாக துபாய்க்கு கூடுதலாக விமானம் ஒன்றினை இயக்குவதாக இன்று அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX-1249 விமானம் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி விஜயவாடாவில் இருந்து திருச்சி வழியாக துபாய்க்கு இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அதேபோல, அதே நாளில் IX-1250 விமானம் துபாயிலிருந்து இந்தியாவின் மும்பைக்கு இயக்கப்படுவதாக அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இணையதளத்திலோ, கால் சென்டர் மூலமாகவோ, நிறுவனத்தின் அலுவலகம் வழியாகவோ அல்லது அங்கீகாரம் பெற்ற ஏஜெண்ட்ஸ் மூலமாகவோ பயணிகள் தங்களுக்கான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!