UAE Tamil Web

துபாயிலிருந்து இந்தியா சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்..? – விளக்கமளித்த விமான நிறுவனம்..!

airindia

துபாயில் இருந்து இன்று மங்களூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரளாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் விமான நிறுவனம் அதனை மறுத்துள்ளது.

துபாயில் இருந்து மங்களூர் சென்ற விமானம் வானிலை மோசமாக இருந்ததால் கேரளாவிற்கு திருப்பப்பட்டதாகவும் இது திட்டமிடப்பட்டே நடந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்,” வானிலை மோசமாக இருக்கும் நேரத்தில் அருகில் உள்ள விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்குவது வழமையான முறைதான். இதை ஏன் சில ஊடகங்கள் அவசர தரையிறக்கம் எனக் கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை” என்றார்.

விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் பத்திரமாக இருப்பதாகவும், அவர்கள் அதே விமானத்தில் மங்களூர் சென்றடைந்ததாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

airindia
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap