34.1 C
Dubai
September 27, 2020
UAE Tamil Web

இந்தியாவிலிருந்து அமீரகம் செல்வதற்கான விமான டிக்கெட் முன்பதிவு துவக்கம் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!

air_india_express_

ஜூலை 12 – 26 ஆம் தேதி வரையிலான தேதிகளில் இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்புவதற்கான விமானங்களின் டிக்கெட் முன்பதிவு துவங்கியிருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.

அமீரகத்திலிருந்து இந்தியா சென்றடையும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் மூலமாக, இந்தியர்கள் அமீரகம் திரும்பலாம். ஆனால், பயணிகள் அமீரக அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடம் (ICA) அமீரகம் திரும்புவதற்கான அனுமதியைப் பெற்றிருத்தல் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்திற்கு வரும் பயணிகள் மட்டுமே இந்த விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ” இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்புவதற்கான டிக்கெட் விற்பனை துவங்கியிருக்கிறது. டிக்கெட் முன்பதிவு செய்ய எங்களது இணையதளம், கால் சென்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை அணுகவும். இதுகுறித்து மேலதிக தகவலைப்பெற http://blog.airindiaexpress.in என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!