UAE Tamil Web

துபாய் – திருச்சி இடையே விமான போக்குவரத்து சேவையை தொடங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா குறைந்துள்ளதால் சர்வதேச அளவில் மீண்டும் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளை முழுவதுமாக இந்தியா சமீபத்தில் மீண்டும் துவங்கியது.

இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன்ம இந்தியா – துபாய் இடையேயான சர்வதேச விமான போக்குவரத்து சேவை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து திருச்சி, கொச்சி, கோழிக்கோடு, லக்னோ, மங்களூர், ஜெய்பூர், மும்பை, திருவனந்தபுரம், அமிர்தசரஸ் மற்றும் டெல்லி என வார 7 நாட்களில் இடையே 80 விமான போக்குவரத்து சேவைகளை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap