UAE Tamil Web

ஏர் இந்தியா விமான சேவைகள் இனி துபாய் விமான நிலையத்தின் டெர்மினல் 1 -ல் நடைபெறும்..!

Air_India_Reuters

கொரோனா காலமாக 15 மாதங்களாக மூடப்பட்டிருந்த துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1 ஜூன் 24 ஆம் தேதிமுதல் மீண்டும் திறக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவின் ஏர் இந்தியா விமானங்கள் டெர்மினல் 1 ல் இருந்து இயக்கப்படும் எனவும் ஜூன் 24 ஆம் தேதிமுதல் இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா விமானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” ஜூன் 24 ஆம் தேதி காலை 10 மணிமுதல் இந்தியாவிலிருந்து துபாய் வரும் மற்றும் துபாயில் இருந்து இந்தியா செல்லும் விமானங்கள் டெர்மினல் 1 ல் இருந்து இயக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெர்மினல் 2 மற்றும் 3 ல் இயக்கப்பட்டு வரும் வெளிநாட்டு விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்கள் இனி அதற்கான பிரத்யேக டெர்மினலான 1 மூலமாக  இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் கான்கோர்ஸ் டி பகுதியில் அமைந்துள்ள டெர்மினல் 1, ஆண்டுக்கு 18 மில்லியன் பயணிகள் பயணிக்கும் திறன் கொண்டது. முக்கிய சர்வதேச போக்குவரத்து மையமான துபாய் சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.

Air_India_Reuters
0 Shares
Share via
Copy link