துபாய் விமான பயணிகளுக்கு ஏர் இந்தியா விமானத்தின் தீபாவளி சிறப்பு பரிசு..!

துபாய், ஷார்ஜா பகுதிகளுக்கு வரும் அக்டோபர் 27ம் தேதி முதல் தினந்தோறும் திருச்சியில் இருந்து விமானங்களை இயக்கப் போவதாக, ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

கூடுதலாக சென்னை, சிங்கப்பூர், ஆகிய பகுதிகளுக்கு திருச்சியில் இருந்து விமானங்களை இயக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையில் இருந்து துவங்கும் இந்த சேவைகள் அடுத்த வருடம் 2020 மார்ச், 30ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தென்தமிழக விமான வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தகவல் : தமிழக ஊடகங்கள்