UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – அமீரகம் இடையே பயணத்தடை தொடரும் – ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு..!

இந்தியா, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் மீண்டும் அமீரகம் வரலாம் என துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. ஜூன் 23 ஆம் தேதிமுதல் இந்தியா – அமீரகம் இடையே பயணிகள் விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனமும் ஜூன் 23 ஆம் தேதிமுதல் இந்தியாவில் இருந்து துபாய்க்கு விமானங்களை இயக்குவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம் பயணி ஒருவரின் கேள்விக்கு ட்விட்டரில் பதிலளிக்கையில், “அமீரக அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் ஜூலை 6 ஆம் தேதிவரையில் இந்தியா – துபாய் இடையேயான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களது ட்விட்டர் பக்கம் மற்றும் இணையதளத்தில் இணைந்திருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆனாலும் ஜூன் 24 ஆம் தேதியில் இருந்து துபாய் விமான நிலையத்தின் 1 ஆம் டெர்மினலில் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும் என அந்நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியாவின் இந்த புதிய ட்வீட் பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

126 Shares
Share via
Copy link