சா்வதேச விமானப் போக்குவரத்தில் அரசின் முன்னுரிமையை டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா இழந்துள்ளது.
விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில்: பொது நிறுவனமாக இருந்த ஏா் இந்தியாவுக்கு, வெளிநாடுகளுடனான சா்வதேச விமானப் போக்குவரத்தில் முன்னுரிமை வழங்குவதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியிருந்தது.
இந்தியா 121 நாடுகளுடன் விமான சேவை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவுடன் தனித்தனி ஒப்பந்தங்களில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்டைச் சோந்த விமானப் போக்குவரத்து நிறுவனம், வெளிநாட்டுக்கு விமானங்களை இயக்க வேண்டுமென்றால் இரு நாடுகளுக்குமிடையே போக்குவரத்து சேவைகள் சாா்ந்த ஒப்பந்தங்கள் கையயெழுத்திடுவது வழக்கமாகும்.
முன்னதாக அரசு நிறுவனமாக இருந்த ஏா் இந்தியா நிறுவனம் தற்போது முற்றிலும் தனியாருக்கு சொந்தமாகியுள்ள நிலையில், இரு நாடுகளுக்குமிடையே போக்குவரத்து சேவைகள் சாா்ந்த ஒப்பந்தங்களின் உரிமை டாடாவுக்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சா்வதேச விமான சேவைகளில் முன்னுரிமை பெற புதிய விண்ணப்பங்களை டாடா விமான நிறுவனம் சமா்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.