அமீரகத்தில் இருந்து இந்தியாவின் இந்தூர் செல்லும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள் கொண்டுவர ஏர் இந்தியா அனுமதி!

Air India Passengers can now carry 40 kg Luggage

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் முதல் புதிதாக தொடங்கியது.

இது குறித்த பதிவுகள் நாம் முன்னரே செய்து இருந்தோம். இதனை அடுத்து, இந்த விமான சேவையை பார்வையிட அமீரகம் வந்திருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஸ்வானி லோகனி இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது அவரிடம், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செல்லும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள்களை கொண்டு செல்ல ஏர் இந்தியா விமான நிறுவனம் அனுமதி அளிக்கவேண்டும், என அமீரகம் வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தியர்களின் வேண்டுகோளை ஏற்று அஸ்வானி லோகனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ சுமை வரை கொண்டு செல்லலாம் என அனுமதி வழங்கினார். அதாவது இந்தூரில் இருந்து துபாய் செல்லும் விமானங்களுக்கு மட்டும் இது பொருந்தும்.

ஏற்கனவே 30 கிலோ சுமை வரை கொண்டு செல்ல அனுமதி இருந்தநிலையில் தற்போது அந்த அளவு 40 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது.

இதனால் அமீரகத்தில் இருந்து இந்தூர் செல்லும் பயணிகள் கூடுதலாக சுமை கொண்டு வர முடியும். இச்செய்தி பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...