ஏர் இந்தியா விமானம் துபாயில் இருந்து புறப்பட சுமார் 24 மணி நேரம் தாமதம் – பயணிகள் விரக்தி…!!

Air India passengers to Mumbai stranded in Dubai for 24 hours (Photo : Gulf News)

ஏர் இந்தியா போயிங் 787 விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலின் காரணமாக, மும்பைக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டனர்.

துபாய் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவன விமானம் இந்தியாவின் மும்பைக்கு நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. இதில் பயணம் செய்ய சுமார் 240 பயணிகள் காத்திருந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து டெர்மினல் 2-ல் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஏர்போர்ட் நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் அந்த விமானமும் இரவு வரை புறப்படவில்லை. இதனால் பயணிகள் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டு நேற்று அதிகாலை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அப்போதும் விமானம் புறப்படும் நேரம் பற்றி தகவல் ஏதும் இல்லாத காரணத்தால், ஆத்திரமடைந்த பயணிகள் சிலர் விமான நிறுவனத்திற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் டுவிட்டரில் புகார் அளித்தனர்.

அதனை தொடர்ந்தும் நேற்று மாலை வரை விமானம் புறப்படவில்லை, இதன் காரணமாக பயணிகள் கடும் அவதியை சந்தித்தனர்.

Loading...